ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் - ஸ்தம்பித்துப்போன அரசு இணையதளம்
தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அரசின் இணையதளம் அதீத விண்ணப்பங்களால் முடங்கியுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை
தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பேருந்துகளுக்கு நடத்துனர் மற்றும் ஓட்டுநர் என மொத்தமாக 685 காலியிடங்கள் இருப்பதாக கூறி, அதனை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
வேலைக்கான விண்ணப்பங்களை பெறுவதற்காக www.arasubus.tn.gov.in இணையதளம் இன்று மதியம் 1 மணிக்கு துவங்கும் என்றும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
ஸ்தம்பித்த இணையதளம்
இந்நிலையில் இன்று இணையத்தில் விண்ணப்பக்கங்களை பெற துவங்கப்பட்ட சில நிமிடங்கலேயே அந்த இணையதளம் முடங்கியுள்ளது. 685 பணியிடங்களை நிரப்ப ஒரே நேரத்தில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்த நிலையில், இணைய சேவை முடங்கியுள்ளது.
மேலும் இணையதளத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் இணையதளம் சரி செய்யப்படும் என போக்குவரத்துதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.