டைப்ரைட்டிங் தெரியுமா? அப்போ வேலை கன்பார்ப்.. TNPSC சூப்பர் அறிவிப்பு!
டைப்ரைட்டிங் பணிக்கான புதிய அறிவிப்பு ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
டைப்ரைட்டிங்
டிஎன்பிஎஸ்சி சிறப்பு போட்டித் தேர்வுக்கான தற்காலிக தட்டச்சு பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் . தமிழ்நாடு அமைச்சுப் பணியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில்
தட்டச்சு பணிக்கான சிறப்பு போட்டித் தேர்வு அறிவிப்பு உயர் நீதிமன்றத்தில் உத்தரவின்படி வெளியாகியுள்ளது. தற்போது பணியில் இருக்கும் தற்காலிக தட்டச்சர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இந்த சிறப்புப் போட்டித் தேர்வு தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 01/07/2024 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதினை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயதினை நிறைவு செய்திருக்கக் கூடாது. பிசி, பிசிஎம், எம்பிசி/டிசி- 34 வயது வரையிலும், எஸ்சி/எஸ்சி(A), எஸ்டி - 37 வயது வரையிலும் இருக்கலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்; ஒரே மையத்தில் பயின்ற 2000 பேர் தேர்ச்சி - சந்தேகத்தில் மற்ற தேர்வர்கள்
கல்வி தகுதி
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் உள்ள தட்டச்சர் பதவிக்கு விண்ணப்பிக்க,
- குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- தட்டச்சு செய்வதில் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறையால் நடத்தப்படும் அலுவலக ஆட்டோமேஷன் குறித்த சான்றிதழ் பாடநெறியில், கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வாகும் முறை
இந்த சிறப்பு போட்டித் தேர்வு ஒருகட்டத் தேர்வாக நடத்தப்படும். நபர்களை எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் இறுதி தரவரிசையாக தீர்மானிக்கப்படுகிறது.
தேர்வர் எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இறுதித் தேர்வு மேற்கொள்ளப்படும்.
தேர்வு நேரம்
- 8/2/2025 (9.30 - 12.30 pm)
காலிப்பணியிடம்
காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை ஐம்பதாகும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தள லிங்க் வாயிலாக விண்ணபிக்கலாம். 25/11/2024 தொடங்கி விண்ணப்பித்தினை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 24/12/2024 ஆகும்.