குரூப் 4 தேர்வில் சங்கரன் கோவில் பகுதியில் மட்டும் 450 பேர் தேர்ச்சி

Government of Tamil Nadu Tamil Nadu Public Service Commission
By Thahir Apr 07, 2023 10:09 AM GMT
Report

அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஒரே பகுதியில் 450 பேர் தேர்ச்சி

மொத்தம் 10 ஆயிரத்து 117 காலி பணியிடங்களில் ஸ்டெனோ டைப்பிங் பிரிவில் மட்டும் 2 ஆயிரத்து 500 காலி பணியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், 450 பேர் சங்கரன் கோவில் பகுதியில் தேர்வாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

tnpsc-group4-only-450-people-passed-sankaran-kovil

ஒரே பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து, அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வாரங்கள் கடந்த நிலையில், இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.