TNPSC குரூப் 2ஏ தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது

By Thahir May 21, 2022 02:04 AM GMT
Report

குரூப்2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 400 பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு, இன்று (மே 21) நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெறவுள்ளது. நடப்பாண்டில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் என மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கும். ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

8.59 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் அறையினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குரூப் -2 தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும்.