மே 21-இல் நடைபெறும் குரூப் 2 தேர்வு, ரிசல்ட் எப்போது? - டிஎன்பிஎஸ்சி தலைவர் முக்கிய அறிவிப்பு!

Governor of Tamil Nadu
By Swetha Subash May 17, 2022 11:53 AM GMT
Report

மே 21-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 மற்றும் 2ஏ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன்,

“குரூப் 2 தேர்விற்கு கடந்த முறையை விட கூடுதலாக 2 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த முறை 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்துள்ளனர்.

மே 21-இல் நடைபெறும் குரூப் 2 தேர்வு, ரிசல்ட் எப்போது? - டிஎன்பிஎஸ்சி தலைவர் முக்கிய அறிவிப்பு! | Tnpsc Group2 2A Exam To Be Held On May 21

குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி மே 21-இல் நடைபெறும். குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கு காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் தேர்வெழுதும் மையத்திற்கு வர வேண்டும். காலை 8.59 வரை தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

79 ஆயிரத்து 942 பேர் தமிழ் வழியில் பயின்றதாக விண்ணப்பம் செய்துள்ளனர். பொது தமிழ் என்ற பாடத்தில் 9 லட்சத்து 46 ஆயிரத்து 288 பேர் தேர்வு எழுத உள்ளனர். 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளன.

மே 21-இல் நடைபெறும் குரூப் 2 தேர்வு, ரிசல்ட் எப்போது? - டிஎன்பிஎஸ்சி தலைவர் முக்கிய அறிவிப்பு! | Tnpsc Group2 2A Exam To Be Held On May 21

தேர்வு நேரத்தில் சோதனை செய்வதற்காக 6,400 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 7 மையங்களில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.

குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 624 பேர் தேர்வு எழுத உள்ளனர். ஜூன் மாத இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.