TNPSC Group 4 Exam Result - நீங்கள் வெற்றியா என்பதை உடனே பாருங்கள்..!
TNPSC குரூப் 4 தேர்வு முடிகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
வெளியானது TNPSC குரூப் 4 தேர்வு முடிகள்
தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 18.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/Home.aspx) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு எழுதியவர்கள் தங்களது பதவி எண்ணை சமர்பித்தால் உங்களுடைய ஒட்டுமொத்த மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை,இடஒதுக்கீடு, இனவாரியான தரவரிசை, சிறப்பு வகை வாரியான தரவரிசை உள்ளிட்ட விவரங்களை திரையில் தோன்றும்.
அடுத்த கட்டமாக, இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தகுதியான நபர்கள் தங்களது அனைத்து சான்றிதழ்களை இணையவழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.