டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2A தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

Governor of Tamil Nadu Tamil Nadu Public Service Commission
By Petchi Avudaiappan May 11, 2022 10:17 AM GMT
Report

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து வருகின்றனர். இதில்  பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்று வகைபடுத்தப்பட்டுள்ளது.  இதனிடையே அரசுப் பணிகளில்          குரூப்2-க்கான நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குரூப் -2 ஏ பணியிடங்களில் 5 ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

இதற்கு பிப்ரவரி 23ஆம் தேதி முதல்  மார்ச் மாதம் 23 ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் தேர்வுகள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை விட இந்த ஆண்டு 60 விழுக்காடு பட்டதாரிகள் அதிகமாக விண்ணப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள இந்த தேர்வு மே 21 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்நிலையில் குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின்‌ இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in மூலமாக தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (ஓடிஆர்) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.