ஹால் டிக்கெட்டில் தவறுதலாக பிரிண்ட்..குரூப் 2 தேர்வு எழுத அனுமதி மறுப்பு..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டில் தேர்வு மையத்தின் பெயர் மாற்றி அச்சிடப்பட்டதால் 26 பேர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
குரூப்2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 400 பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு, இன்று நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெறவுள்ளது. நடப்பாண்டில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் என மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது இந்த தேர்வு குரூப் -2 தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது.
இதனிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் குரூப் 2 தேர்வு எழுத 26 பேர் சென்றனர். அப்போது அவர்கள் திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்றனர்.
ஆனால் அந்த பள்ளி இல்லை நீங்கள் செஞ்சியில் உள்ள பள்ளிக்கு செல்லுமாறு தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு செஞ்சி தனியார் பள்ளி தேர்வு மையத்திற்கு சென்ற அவர்களை தேர்வு நேரத்தின் நேரம் ஆகிவிட்டதால் உங்களை அனுமதிக்க முடியாது என கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த தேர்வர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
![அரசியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி அவசியம்...! சுட்டிக்காட்டும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர்](https://cdn.ibcstack.com/article/a271d428-2b27-40b4-8402-783e23a46fea/25-67a712c8ab08b-sm.webp)
அரசியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி அவசியம்...! சுட்டிக்காட்டும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் IBC Tamil
![சீரழிக்கப்பட்டு தொடருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி : இந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்](https://cdn.ibcstack.com/article/5ae555cf-86cc-4bea-a140-7c068a23059d/25-67a6422204521-sm.webp)
சீரழிக்கப்பட்டு தொடருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி : இந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் IBC Tamil
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)