டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத போறீங்களா? வெளியான முக்கிய அலெர்ட்!
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான விண்ணப்ப கால அவகாசம் முடியவுள்ளது.
டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 507 குரூப்-2 பணியிடங்கள் மற்றும் உதவியாளர்,
கணக்கர் உள்ளிட்ட ஆயிரத்து 820 குரூப்-2ஏ பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கான தேர்வுகள் வரும் செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்று தான் கடைசி நாள்.
விதி மாற்றம்
இந்நிலையில், ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வரும் 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு, எந்த மாற்றமும் செய்ய அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதன்படி, ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து பின்னர் ஷெட்டில் அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை தேர்வு செய்ய கூடாது.