பதில் இல்லையா? - டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி
டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த அந்தக் கேள்வி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் அதிர்ச்சியாக கேட்கும்படி அமைந்திருக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக குரூப்-1 குரூப்-2 குரூப்-4 போன்ற பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி மிகவும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது . அந்த கேள்வியை பார்த்த நீதிபதியே அதிர்ச்சியாகி இருக்கிறார்.
கேள்விகளுக்கு பதிலளிக்க , நான்கில் ஒன்றினை தேர்ந்தெடுக்க வேண்டியதுதான் பதில். நான்கு தேர்வுகள் கொடுக்கப்பட்டிருப்பதில், ‘எதுவும் இல்லை ’என்பதற்கு பதிலாக ‘பதில் இல்லை’ என்று இருந்துள்ளது.
இதைப் பார்த்து தேர்வு எழுதியவர்கள் மத்தியில் அப்போதே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் தான் தற்போது இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு இருக்கிறது.
வழக்கு விசாரணையின்போது கேள்வித்தாளில் கேட்கப்பட்டு இருந்ததை கண்டு, என்ன பதில் இல்லையா என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.