டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் - கோப்புகளை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி.
ஆளுநர் ஆர்.என். ரவி
கடந்த ஜூன் ம் தேதி டி.என்.பி.எஸ்.சி தலைவராகா ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழக அரசு பரிந்துரை கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பியது. இந்நிலையில் இந்த கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என். ரவி, நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்பட்டதா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை
மேலும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை தமிழக அரசு பின்பற்றப்படவில்லை என்றும் பின்பற்றப்பட்ட நாவடிக்கை குறித்த விவரங்களை அளிக்குமாறும் கேட்டு, நியமனம் தொடர்பான ஆவணத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே, ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கானது நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகள் ஒவ்வொன்றையும் ஆளுநர் திருப்பி அனுப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.