3வது முறையாக டிஎன்பிஎல் கோப்பையைக் கைப்பற்றியது சேப்பாக் கில்லீஸ் அணி.
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
5வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடர் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதியது.
இதில் டாஸ் வென்ற திருச்சி வாியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணியால் 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
