உடனே இதை செய்யுங்க - தமிழக மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு
மின் விபத்து தொடர்பாக புதிய விதிமுறைகளை தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வீடுகள், கடைகள்,மருத்துவமனை மற்றும் பூங்காக்களில் ஆர்.சி.டி பொருத்த வேண்டும் என கூறியுள்ளது. மின் அதிர்ச்சியை தவிர்த்து மனித உயிர்களை காக்கும் பொருட்டு, 30 மில்லி ஆம்பியர் அளவிற்கான மின்கசிவை உணரும் திறன் கொண்ட ஆர்.சி.டி சாதனத்தை பொருத்த வேண்டும் என கூறியுள்ளது.
மேலும் , 10 கிலோ வாட்டிற்கு மேல் மின் சாதனங்களை பொருத்தியிருக்கும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள், மருத்துவக் கூடங்கள், கிடங்குகள், பெரிய தொழிற்சாலைகள் போன்ற உபயோகத்திற்கான மின் இணைப்புகளில் மின் கசிவினால் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் பொருட்டும், உடைமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும் அந்தந்த வளாகங்களில் மின் இணைப்பு மொத்தமாக ஆரம்பிக்கும் இடத்தில் 300 மில்லி ஆம்பியர் அளவிற்கான மின்கசிவை உணரும் திறன் கொண்ட ஆர்.சி.டி சாதனத்தை பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அந்தந்தப் பகுதியில் உண்டாகும் மின் பழுதினால் ஏற்படும் மின் அதிர்ச்சியிலிருந்து காக்கப்படுவார்கள். புதிதாக மின் இணைப்பு கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும், மேற்கண்ட உயிர் காக்கும் சாதனத்தை மின் இணைப்பு கோரும் கட்டடத்தில் நிறுவி, அதை விண்ணப்பப் படிவத்தில் உறுதியளிக்க வேண்டும். இல்லையேல், மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.