தமிழ்நாட்டில் இனி மின்தடை இல்லை - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!
மின்கட்டணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சேலத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் மின் கட்டண குளறுபடி குறித்து பயனீட்டாளர்கள் யாரும் இதுவரை எவ்வித புகாரும் அளிக்கவில்லை. உரிய ஆதாரத்தோடு புகார் தெரிவித்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.என்ற அவர்,பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் கட்ட நேர்ந்தால் அடுத்த கணக்கீட்டின் போது அந்த கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு என பொத்தம் பொதுவாக கூற முடியாது. கடந்த 19-ந்தேதி தொடங்கிய பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது.
மின்வாரியம் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையில் ரூ. 2,000 கோடியை குறைக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதிய மின் திட்டங்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்தடை தொடர்பான புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று கூறினார்.