அடுத்த 2 வாரங்கள் ரொம்ப கவனமா இருங்க: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
மக்கள் தேவையில்லாமல் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக கூறினார்.
அதே சமயம் வரும் 2 வாரங்கள் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறிய ராதாகிருஷ்ணன் கொரோனா நோயால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 81,871 கொரோனா படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாக கூறினார்.
மேலும், தற்போது வெண்டிலேட்டர் வசதிகள் தேவையான அளவு இருப்பதாகவும் மக்கள் தேவையில்லாமல் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் 91.6% பாதுகாப்பானது எனவும் அடுத்த 2 வாரங்கள்அனைவரும் முகக்கவசங்கள் அளித்தாலே கொரோனா குறைய வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் சென்னையில் குடியிருப்பு அல்லது தெருவில் 3 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்த இடம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார் .