நேற்று மாலை வரை 6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் !
தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் மூலம் நேற்று மாலை வரை 6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த ஊரடங்கால் எந்த பயணும் இல்லாததால் இன்று முதல் மேலும் ஒரு வாரம் தளர்வற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றும், நேற்று முன் தினம் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிறு மாலை வரை 6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னையில் இருந்து மட்டும் 65,746 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தமிழக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.