அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா : சட்டப்பேரவையில் தாக்கல்

By Irumporai May 05, 2022 09:43 AM GMT
Report

அம்பேத்கர் சட்ட பல்கலைகழக சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ரகுபதி பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை, சுற்றுலா கலை பண்பாட்டுத்துறை, இயக்கூர்த்திகள் குறித்த சட்டங்கள் நிருவாகத்துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது, அம்பேத்கர் சட்ட பல்கலைகழக துணை வேந்தரை, மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். அம்பேத்கர் சட்ட பல்கலைகழக வேந்தராக முதல்வர் இருக்கும் வகையில் மசோதா உருவாக்கப்ட்டுள்ளது.

மேலும், இந்த மசோதாப்படி அம்பேத்கர் சட்ட பல்கலைகழக துணை வேந்தரை தமிழக அரசே நியமிக்கும். ஏற்கனவே, நடந்த பேரவையில் கூட்டத்தொடரில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வந்த நிலையில், மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதுபோன்று புதிதாக அமைக்கப்பட உள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் அம்பேத்கர் சட்ட பல்கலைகழக துணை வேந்தரை, மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.