இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு - ஒரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் குஷி!
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவான 27 மாவட்டங்களில் மட்டும் ஒரு மாதத்திற்குப் பின் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஜூன் 21ஆம் தேதி வரை மேலும் ஒருவார காலத்திற்கு தளர்வுகளுடம் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது.
இதில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
மேலும் தொற்று குறையாத கோவை, நீலகீர், திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் எந்த தளர்வுகளும் அளிக்கப்படாமல், கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மட்டும் ஒரு மாதத்திற்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.
இன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகளை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகளை திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.