தமிழகத்தில் வாக்காளர்கள் எத்தனை கோடி?

Tamil nadu Election
By Fathima Feb 23, 2026 11:41 AM GMT
Report

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று டிசம்பர் 19 -ஆம் தேதி முதற்கட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.

இப்பட்டியலில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர், உரிய ஆவணங்கள் அளித்து மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறலாம் என கூறப்பட்டது.

இதன்படி இன்று இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் மாவட்டம் வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல், மாவட்ட ஆட்சியர்களால் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வடக்கு மண்டலம் யாருக்கு சாதகம்? IBC தமிழ் கருத்துக்கணிப்பு

வடக்கு மண்டலம் யாருக்கு சாதகம்? IBC தமிழ் கருத்துக்கணிப்பு


அதாவது, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 -ஆம் தேதி நிலவரப்படி 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 பேர் இருந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் படி, சுமார் 99 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்களாக மாறியதாக குறிப்பிட்டார்.

இதில் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பெண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 617 மூன்றாம் பாலினத்தவரும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்காளர்கள் எத்தனை கோடி? | Tn Voters Count Final 2026