குறையும் வந்தே பாரத் ரயில் டிக்கெட் - எவ்வளவு தெரியுமா?
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணச்சீட்டு விலை குறையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வந்தே பாரத்
2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, 136 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.10 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 800 கி.மீ தூரத்தில் உள்ள நகரங்களை இணைக்கிறது.
இந்த ரயிலின் கட்டணம் மிக அதிகம் என்ற கருத்து பயணிகளிடத்தில் உள்ளது. இந்நிலையில், வந்தே பாரத் பயணச்சீட்டு விலையைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படலாம்.
மேலும், கட்டணத்தில் சலுகைகள் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதன்படி டிக்கெட் விலை குறைக்கப்பட்டால், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிக்கெட் விலை குறைவு
மதுரை - பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி சாதாரண இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூபாய் 440, திருச்சிக்கு ரூபாய் 555, கரூருக்கு ரூபாய் 795, நாமக்கல்லிற்கு ரூபாய் 845, சேலத்திற்கு ரூபாய் 935,
கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூபாய் 1555, பெங்களூரு கண்டோன் மெண்ட்டிற்கு ரூபாய் 1575 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி சாதாரண இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய சென்னையிலிருந்து தாம்பரத்திற்கு ரூபாய் 380,
விழுப்புரத்திற்கு ரூபாய் 545, திருச்சிக்கு ரூபாய் 955, திண்டுக்கல்லுக்கு ரூபாய் 1105, மதுரைக்கு ரூபாய் 1200, கோவில்பட்டிக்கு ரூபாய் 1350, திருநெல்வேலிக்கு ரூபாய் 1665, நாகர்கோவிலுக்கு ரூபாய் 1760 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.