தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

tnurbanlocalbodyelectionended 2022urbanelectionstn
By Swetha Subash Feb 19, 2022 01:04 PM GMT
Report

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

காலை 7 மணி முதலே தொடங்கப்பட்ட வாக்குப்பதிவில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.

காலை 9 மணி நிலவரப்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8.21% வாக்குகள் பதிவாகியிருந்தது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சராசரியாக 35.34 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. 

5 மணியில் இருந்து 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுப்பெற்றது.