5 மணி நேரம் தொடர் கனமழை - சாலைகளில் வெள்ளப்பெருக்கு!
rain
heavy rain
salem
tn
By Anupriyamkumaresan
சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு 5 மணி நேரமாக வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் பெய்யும் மழை காரணமாகக் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
இதனால் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சூழலில் சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான மழை இன்று பெய்யத் தொடங்கியது.
நேரம் செல்லச்செல்ல அது பலத்த மழையாக மாறியது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது பெய்த மழை காரணமாகச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.