யாருக்கெல்லாம் பொங்கல் பரிசுத்தொகுப்பு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்படும்.
அதன்படி, இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
முதலமைச்சர் அறிவிப்பு
மேலும், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரகளுக்கு ரூ1000 ரொக்கம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.