தமிழகத்தில் அதிகபட்சமாக பதிவான மழை நிலவரம்
rain updates
tamilnadu rain
By Fathima
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பதிவான மழை நிலவரம்:
ஆவடியில் 20 செ.மீ., சோழவரத்தில் 15 செ.மீ., திருவள்ளூரில் 13 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாமல்லபுரம், செங்கல்பட்டு பகுதியில் 18 செ.மீ. மழை பதிவானது. அம்பத்தூரில் 12 செ.மீ. மழையும், பெரம்பூரில் 10.செ.மீ. மழையும் பதிவானது.
அயனாவரம், மெரினாவில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருக்கழுக்குன்றத்தில் 16 செ.மீ. மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.