பின்னடைவில் திமுக - அண்ணா அறிவாலயத்தில் அகற்றப்படும் கொண்டாட்ட ஏற்பாடு?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
அண்ணா அறிவாலயம்
4வது சுற்று எண்ணப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழகம் 107 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 78 தொகுதிகளிலும், திமுக 48 தொகுதிகளிலும், மற்றவை 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் அகற்றப்பட்டு வரும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆனால் அங்குள்ள தொண்டர் ஒருவர், இது வேறு ஒரு நிகழ்வுக்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடு, இதற்கும் தேர்தல் முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திமுக முன்னிலை பெரும் என தெரிவித்துள்ளார்.