தமிழகத்திற்கு 24 ஆயிரம் கனஅடி நீர் வேண்டும்...அமைச்சர் துரைமுருகன்
15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை போதாது என்பது தமிழகத்தின் நிலைப்பாடு என குறிப்பிட்டார்.
5000 கன அடி நீர் போதாது
நீர்வளதுறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை போதாது என்பது தமிழகத்தின் நிலைப்பாடு என குறிப்பிட்டார். மேலும், இன்று மதியம் 2 மணிக்கு காவிரி மேனேஜ்மென்ட் அத்தாரிட்டி கூட்டம் நடைபெறுகிறது என்றும் அதில் தமிழக நீர்வள துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் CTC chairman சுப்ரமணியம் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளார்கள் என கூறினார்.
இந்த குழுவில் பங்கெடுத்து கொள்ளும், அவர்களிடம் 24 ஆயிரம் கன அடி தண்ணீர் இருந்தால் தான் தமிழகத்தில் பயிர்கள் வெயிலில் காய்ந்து போகாமல் இருக்கும் என்பதை நடைபெறவுள்ள கூட்டத்தில் அழுத்தம் திருத்தமாக கூறும் படி வலியுறுத்தியுள்ளதாக துரைமுருகன் தெரிவித்தார்.
தகுந்த காப்பீடு தொகை வழங்கப்படும்
கர்நாடக முதல்வர் சித்தராமையா தண்ணீர் தரமுடியாது என கூறிய நிலையில், அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளதை குறிப்பிட்ட துரைமுருகன், தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த காப்பீடு தொகை வழங்கப்படும் என கூறினார்.
மேலும், ஏற்கனவே 45 டி.எம்.சி தண்ணீர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, தற்போது தேவை ஒன்றை பெற்றுவிட்டு, பின்னர் 45 டி.எம்.சி தண்ணீரை கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்தார்.