மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு - பேசியது என்ன?

Delhi Karnataka Bussy Anand Aadhav Arjuna
By Karthikraja Nov 18, 2026 01:28 PM GMT
Report

tamilnadu minsiter met jal shakti minister regard mekedatu dam issue: மேகதாது அணை தொடர்பாக தமிழக அமைச்சர்கள், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

மத்திய நீர்வள அமைச்சருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

கர்நாடகாவில் நடைபெற்ற அரசு கலந்து கொண்ட பிரதமர் மோடியின் முன்னிலையிலே, மேகதாதுவில் அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது என பேசினார். அவரின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், சட்டமன்றத்தில் மேகதாதுவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் பிரதமரை சந்ததிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதினார். 

மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு - பேசியது என்ன? | Tn Minsiters Met Jal Shakti Minister For Mekedatu

இதைத்தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்கள் டெல்லிக்கு சென்று மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர்.பட்டீலை இன்று சந்தித்து பேசினர்.

பேசியது என்ன?

இந்த சந்திப்பில், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒரு கடிதம் ஒன்றை அளித்தனர். 

மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு - பேசியது என்ன? | Tn Minsiters Met Jal Shakti Minister For Mekedatu

இதன் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்கள், "மத்திய அமைச்சரை மேகதாது தொடர்பாகச் சந்தித்தோம். இந்த விவகாரத்தில் சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம் என்று தெரிவித்தோம். தமிழகத்தின் உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதையும் தெரிவித்துள்ளோம்.

2018 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நமக்கு சாதகமாக உள்ளது. அதனை யாரும் மீற முடியாது. அரசியல் காரணங்களுக்காக அங்குள்ள தலைவர்கள் சில கருத்துக்களை கூறலாம். நாம் சட்டரீதியாக போராடுவோம்.

DPR (விரிவான திட்ட அறிக்கை) தயாரிக்கப்பட்டால், அதன் மீது எந்தவொரு முடிவும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினோம். எங்களுடைய கருத்துகளை கூர்மையாகக் கேட்ட மத்திய அமைச்சர், DPR தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று உறுதியளித்துள்ளார்" என பேசினார்.