மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக அமைச்சர் : செய்தியாளரின் கேமராவை ஆவேசமாக தாக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன் , நடந்தது என்ன?

tamilnadu dmk ministerrajakannappan journalist attack
By Irumporai Mar 31, 2022 03:30 AM GMT
Report

போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ராஜகண்ணப்பன், போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரை சாதியை சொல்லி இழிவாக  திட்டியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து  தற்போது போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு அவர் பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு அமைச்சராக மாற்றப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் பிரபல ஆங்கில தனியார் தொலைகாட்சியைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கேள்வி கேட்க முயற்சித்தபோது, பதிலளிக்க மறுத்த அவர், கேமராவை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

“லஞ்ச புகார்களில் சிக்கி இருக்கும் போக்குவரத்து ஆணையர் நடராஜன் வெறும் பணியிட மாற்றம் செய்யப்பட்டது சரியான நடவடிக்கையா?” என அந்த செய்தியாளர் அமைச்சர் ராஜ கண்ணப்பன்னிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு பதிலளிக்க மறுத்த அவர், பெண் நிரூபரின் கேமராவை கோபமாக தாக்கிய காட்சிகள் வீடியோவாக பதிவாகியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் செய்தியாளர் ஷில்பா, அமைச்சர் பதில் சொல்ல மறுத்தது மட்டுமின்றி கேமராவை தாக்கிவிட்டுச் சென்றதாகவும் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே அரசு ஊழியரை சாதிய பெயரை சொல்லி திட்டியதால் அவரது அமைச்சரவை துறை மாற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன்