"கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் ஹொய்...ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன்" - சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர்

ministermanosilambam tnministerplayssilambam
By Swetha Subash Feb 27, 2022 10:20 AM GMT
Report

தமிழக அளவிலான சிலம்பம் போட்டியை தொடங்கி வைத்த பின் சிலம்பம் சுற்றி அசத்தினார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழக அளவிலான சிலம்பம் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்,

சிலம்பம் சுற்றும் வீரர்களின் முன் தானும் சிலம்பம் சுற்றுவதில் வல்லவன் என்று எடுத்துக் காட்டும் விதமாக சிலம்பம் சுற்றி காண்போரை வியப்பில் ஆற்றினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழக அளவிலான சிலம்பாட்ட போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியை லெமூரியா வர்மகளரி அடிமுறை உலக கூட்டமைப்பு சார்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான பங்கேற்கும் இந்த போட்டியை தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்.

அப்போது போட்டிகளை தொடங்கி வைக்கும் விதமாக அமைச்சர் மனோ தங்கராஜ் காண்போரை வியக்கும் வகையில் சிலம்பம் சுற்றி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மிகத் துடிப்புடன் சிலம்பம் சுற்றிய அமைச்சருக்கு பாராட்டு மழை குவிந்தது வருகின்றது.