இனி சொகுசு கார்களை இப்படியும் பயன்படுத்தலாம் - போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!
சொகுசு வாகனங்களை வாடகைக்குப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சொகுசு வாகனங்கள்
தமிழகத்தில், 150 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் யூனிட் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பொதுவாக, பயன்பாட்டில் உள்ள வாகனங்களை தவிர, சுற்றுலா உள்ளிட்ட பொது போக்குவரத்து பயன்பாட்டுக்காக வரும் புதிய ரக வாகனங்கள்,
சொகுசு வசதியுள்ள வாகனங்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் நேரடியாக அனுமதி வழங்காது. தற்போது, இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இனி வாடகைக்கு..
சுற்றுலா மற்றும் பொது போக்குவரத்திற்கான அனைத்து வகை வாகனங்களுக்கும் இனி, தமிழக அரசிடமோ, போக்குவரத்து ஆணையகத்திலோ அனுமதி பெற வேண்டியதில்லை; வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலேயே அனுமதி பெற்று இயக்கலாம் என, தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில், புதிய ரக மற்றும் சொகுசு வசதி உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு உரிய அனுமதி பெற, சம்பந்தப்பட்ட டீலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் வாயிலாக, தமிழக போக்குவரத்து ஆணையரகத்திடம் உரிய அனுமதி பெறும் நிலை இருந்தது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி, சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டனர்.
அதனால், சுற்றுலா பயணியருக்கு வாகனங்களை இயக்குவதிலும் சிரமம் இருந்து வந்தது.
தற்போது வந்துள்ள புதிய உத்தரவால், டீலர்கள் அனுமதி பெற அலைய தேவையில்லை. சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்திலேயேஅனுமதி பெறலாம்.
இது, புதிய மற்றும் சொகுசு வகை கார்கள், பஸ்கள், வேன்கள் என, அனைத்து வகையான சுற்றுலா உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளனர்.