ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு - தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு வாரமும் தமிழக அரசு கூடுதல் தளர்வு களை அழித்து ஊரடங்கு நீட்டித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது கூடுதல் தகவல்களுடன் மேலும் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண நிகழ்வுகளில் 50 பேர்,இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.
உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரி உள்ளிட்ட கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி.
வேலைவாய்ப்பு எழுத்துத்தேர்வுகளுக்கு அனுமதி.
தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவைக்கு அனுமதி ஆகிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அரசியல் கூட்டங்கள், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், திரையரங்குகள், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து, பள்ளி கல்லூரிகள் திறப்பு, உயிரியியல் பூங்காக்கள், நீ்ச்சல் குளங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.