தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள்
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்த டாக்டர் டி. ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விடுப்பிலிருந்து திரும்பிய கே.எம். சரயு, பேரூராட்சிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணிக்குச் சென்ற டாக்டர் கே.பி. கார்த்திகேயனுக்குப் பதிலாக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநராக இருந்த டாக்டர் சி. பழனி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுவதற்காக அந்நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், பேரூராட்சிகள் இயக்குநர் ஆகிய பதவிகளும் சமூக நலத்துறை இயக்குநர் பதவிக்கு இணையான அந்தஸ்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன.