வரும் 24-ந் தேதி கிராம சபைக் கூட்டம் - ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு
வரும் 24-ந் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கவும், உறுதி மொழி எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகள் காலமாக கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில் வருகிற 24-ந் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் என்பதால் அன்றைய தினம் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்ததற்கு பிறகு நடைபெறக்கூடிய இந்த கிராம சபை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கிராம சபைக் கூட்டங்கள் தொடர்பான விவரங்களை மத்திய அரசின் இணையதளத்தில் உள்ளீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.