தமிழக அரசின் ட்விட்டர் பக்கம் ஹேக்

Twitter Hackers
By Irumporai Jan 01, 2023 06:24 AM GMT
Report

ட்விட்டரில் கடந்த சில மாதங்களாக  பல்வேறு நாட்டு அரசுகள், செய்தி தொடர்பு துறைகள், பிரபலங்கள் பலரும் கணக்கு வைத்துள்ள நிலையில்,திகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்து அதில் க்ரிப்டோகரன்சி விளம்பரங்களை வெளியிடுவது சமீபமாக அதிகரித்துள்ளது. 

தமிழக அரசின் ட்விட்டர் பக்கம் ஹேக் | Tn Govt Twitter Account Hacked

தற்போது தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை ட்விட்டரில் வெளியிட்டு வரும் செய்தி தொடர்புதுறையின் அதிகாரப்பூர்வ கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இதனால் அதில் இருந்த பதிவுகள் மாயமான நிலையில் க்ரிப்டோகரன்சி விளம்பரங்கள் தோன்றியுள்ளன. நள்ளிரவு 1.30 மணி அளவில் இது ஹேக் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ட்விட்டர் கணக்கை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.