கரூரில் வழங்கப்பட்ட அரசு வேலை ரத்து - அரசின் நிலைப்பாடு என்ன?

Vijay Supreme Court of India Karur
By Karthikraja Jul 27, 2026 02:14 PM GMT
Report

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ள நிலையில், தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.

உச்சநீதிமன்றம் செல்லும் தவெக அரசு

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை 10 ஆம் திகதி கரூர் சென்ற முதல்வர் விஜய், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசுப்பணிக்கான ஆணையை வழங்கினார். 

கரூரில் வழங்கப்பட்ட அரசு வேலை ரத்து - அரசின் நிலைப்பாடு என்ன? | Tn Govt To Appeal In Sc Regard Karur Govt Job

இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில், கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை தமிழ்நாடு அரசு மீறியுள்ளதாக கூறிய நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.

மேலும், "திறன் கருணை அடிப்படையில் ஆன பணிக்காக காத்திருப்பவர்களை மீறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முன்னுரிமை அளிக்கப்பட்டது? சிவகாசியில் வெடி விபத்தில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அவர்களுக்கும் அரசு வேலை வழங்க முடியுமா?

சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை தர முடியுமா? அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளது. 

கரூரில் வழங்கப்பட்ட அரசு வேலை ரத்து - அரசின் நிலைப்பாடு என்ன? | Tn Govt To Appeal In Sc Regard Karur Govt Job

இந்த தீர்ப்பை எதிர்த்து நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.