இனி ரேஷனில் அரிசிக்கு பதில் இந்த பொருள் - அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இனி ரேஷன் கடைகளில் சிறு தானியங்களை வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
உணவுத் திருவிழா
திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான சிறு தானிய உணவுத் திருவிழா நடைபெற்றது.. இந்த விழாவில் அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
கேழ்வரகு
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் சிறுதானியங்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களை அதிகமாக உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக வாழலாம்.
சிறுதானியங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சிறுதானிய உணவு வகைகள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக பொது விநியோக திட்டத்தின் கீழ் தற்போது நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்கப்பட்டு வருகிறது.
சிறு தானியங்கள்
சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு விரைவில் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், கம்பு, சாமை, வரகு, குதிரை வாலி, திணை, உள்ளிட்ட சிறு தானியங்கள் வழங்க ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சிறு தானியம் ஆனது நேரடியாக தர்மபுரி கிருஷ்ணகிரி செயலும் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டத்திலுள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதாகவும் கூடிய விரைவில் இதனை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் அளவிற்கு உற்பத்தியை உயர்த்த கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.