வினாடிக்கு 5000 கனஅடி நீர் போதாது...மீண்டும் உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு

M K Stalin Tamil nadu DMK Karnataka
By Karthick Aug 31, 2023 06:30 AM GMT
Report

தமிழ்நாட்டிற்கு 5000 கனஆடி நீர் போதாது என குறிப்பிட்டு மீண்டும் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

காவிரி விவகாரம்

போதுமான நீர் இல்லை என்ற காரணத்தை கூறி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு அளிக்கவேண்டிய நீரை தராமல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக தமிழக அரசும், தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

tn-govt-petition-in-sc-for-kaviri-issue-again

தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் அடுத்த 15 நாட்களுக்கு திறந்து விடப்படும் என காவிரி ஒழுங்காற்று வாரியம் தெரிவித்துள்ள நிலையில், அதனை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளது. இந்த சூழலில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டார். 

தண்ணீர் திறந்து விட முடியாது

அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு 24 ஆயிரம் கன அடி நீர் தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், நடைபெற்ற கூட்டத்தில் இந்த கூட்டத்தில் கர்நாடாகா அரசு தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிடவே முடியாது என்று கூறியுள்ளது.

 tn-govt-petition-in-sc-for-kaviri-issue-again

கர்நாடகாவில் வெறும் 47 சதவீத தண்ணீர் மட்டும் இருப்பதாலும், மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாலும் தண்ணீர் திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடகாவின் . நான்கு அணைகளில் போதுமான அளவு நீர் இல்லை என்ற காரணத்தால் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.   

மீண்டும் உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு

இதற்கிடையில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி நீர் திறந்து விடப்படும் என காவிரி மேலாண்மை ஆணைய குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn-govt-petition-in-sc-for-kaviri-issue-again

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த முடிவை ஏற்க மறுக்கும் தமிழக அரசு, தமிழகத்திற்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் வேண்டுமென கோரிக்கை வைத்து இந்த விவகாரத்தில் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், இதில் கர்நாடக அரசும் தனியாக மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.