தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட அரசு அதிரடி உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை வரும் 19 ஆம் தேதி மூட தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் மிலாடி நபி பண்டிகையாக கொண்டாடப்பட்டுவருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி வியாழக்கிழமை பிறை வந்ததையடுத்து வரும் 19 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக வரும் 19 ஆம் தேதி டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு தடை விதி்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாஸ்மாக் மதுபானக் கடைகள், உணவு விடுதியுடன் கூடிய மதுக்கூடங்கள் ஆகியவை மூடப்படும் என்றும், இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.