?LIVE: பொது போக்குவரத்திற்கு தடை? தேவையான உணவு பொருட்களை வாங்கி வைக்க தமிழக அரசு அறிவுறுத்தல்
நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையான உணவு பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பயணங்களை தவிர்க்க வேண்டுகோள்
கடலோர மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு அதிகாரிகள் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பொதுமக்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் ஆங்காங்கே மின் கம்பங்கள் , மரங்கள் சாய்ந்து விழ வாய்ப்பு இருப்பதால் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து துண்டிப்பதற்கான ஆலேசானையில் போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தேவையான உணவு பொருட்களை வாங்கி வைத்துக்கொள் அறிவுரை
நாளை மாலை அவசியமற்ற பயணங்கள் இருந்தால் அதனை தவிர்க்க வேண்டும் என்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து துண்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தலைமைச் செயலர் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.