போக்குவரத்து சேவை கட்டணங்களை அதிகரிக்க தமிழக அரசு முடிவு

By Irumporai Aug 22, 2022 10:21 AM GMT
Report

தமிழக அரசு, போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்களை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதன் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து  சேவை கட்டணங்களை அதிகரிக்க தமிழக அரசு முடிவு | Tn Govt Has Increase Charges In Transport

போக்குவரத்து துறையில் பல்வேறு கட்டணங்கள் வசூலித்து வருகின்றனர், வாகனங்களை பதிவு செய்வதற்கு கட்டணம், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் எல்.எல்.ஆர். வாங்குவதற்கு கட்டணம், பேன்சி நம்பர் வாங்குவதற்கு கட்டணம் என பல்வேறு கட்டணங்கள் உள்ளது.

போக்குவரத்து துறையில் உயரும் கட்டணம்

அதுமட்டுமின்றி வாகனங்கள் சரிவர பராமரிக்கப்பட்டு இயக்குவதற்கு தகுதியான வாகனம் என சான்றிதழ் அளிப்பதற்கு (எப்.சி.) குறிப்பிட்ட கட்டணமும் உள்ளது, புதியவாகனங்களை பதிவு செய்வதுற்கு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கபட்டு வருகிறது.

இத்தகைய கட்டணங்கள் மூலம் போக்குவரத்துக்கு துறைக்கு வருமானம் வருகிறது. 2021-22-ம் ஆண்டில் மட்டும் தமிழக அரசுக்கு வருமானம் ரூ.5,271.9 கோடி பெற்றுள்ளது. போக்குவரத்து துறைக்கு இந்த வருமானம் போதாததால் சேவை கட்டணங்களை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால் டிரைவிங் லைசென்ஸின் கட்டணம் மட்டும் அதிகரிக்கவில்லை. தமிழக அரசு இதன் தொடர்பாக கடந்த மாதம் சில கொள்கைகளை எடுத்துள்ளது. 10 மடங்கு வரை போக்குவரத்து துறை சேவைகளுக்கான கட்டணம் உயரும் என தெரிகிறது.

கட்டணங்களில் திருத்தம்

2006-07-ல் இதற்கு முன்பு மோட்டார் வாகன கட்டணம் திருத்தும் மேற்கொள்ளப்பட்டது. அதற்குப்பின் தற்போதுதான் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகாரிகள், இந்த மாத இறுதியில் பொதுமக்களுக்கு, திருத்தப்பட்ட கட்டணம் எந்த தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்பது தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது திருத்தப்பட்டுள்ள மோட்டார் வாகன திருத்த சட்டத்தில் வாகனம் ஊடுபவரின் உடல் தகுதியும் முக்கியம் என தெரிவித்துள்ளனர். ரூ.75-ல் இருந்து ரூ.400 ஆக வங்கிகள் மூலம் சரிபார்க்கும் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகலுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது, ரூ.250 ஒவ்வொரு சேவைக்கும் கூடுதலாக புதிய கட்டணம் வசூலிக்கப்பட கூடும் என கூறப்படுகிறது.