தமிழகத்தில் தேர்தல் அன்று பொது விடுமுறை! தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

By Fathima Mar 20, 2026 05:09 AM GMT
Report

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 23ம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொதுவிடுமுறை வழங்கிட தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் 5.69 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 2.90 கோடி பெண் வாக்காளர்களும், 2.78 கோடி ஆண் வாக்காளர்கள், 7,656 திருநங்​கைகளும் உள்ளனர்.

இந்​நிலை​யில், தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து அரசு, பொதுத்​துறை மற்​றும் தனி​யார் நிறு​வனங்​கள், அனைத்து கல்வி நிறு​வனங்​கள், தொழிற்​சாலைகள் ஆகிய​வற்​றுக்கு ஏப்​.23-ம் தேதி சம்​பளத்துடன் கூடிய பொது விடுமுறை விட வேண்​டும் என தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

தினக்​கூலி தொழிலாள​ராக இருந்​தா​லும் விடுப்பு அளிக்க வேண்​டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் அன்று பொது விடுமுறை! தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் | Tn Govt For Public Holiday On Polling Day