இனி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - அரசு எச்சரிக்கை
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் போராட்டம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட காலமாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து,
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாக உள்ளது. மேலும், ஆண்டுக்கு 15 நாட்கள் விடுப்பு சரணடைவு திட்டத்தை மீண்டும் கொண்டுவருதல்,
அரசு எச்சரிக்கை
பணிக்கொடை உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றை வலியுறுத்துகின்றனர். இந்த கோரிக்கைகள் நிறைவேறாததால் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இன்று போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் வழங்கப்படாது. மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது.
காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan
