தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? பதிலளித்த தமிழக அரசு
உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
பின்னர் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வார்டு மறுவரையறை செய்யப்பட்ட பின், கடந்த 2021ஆம் ஆண்டு மீதமுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
தமிழக அரசு பதில்
முதலில் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தில் முடிவடைகிறது. இதனால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் முனியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று(21.12.2024) நீதிபதிகள் எஸ். எஸ்.சுந்தர் மற்றும் பி.தனபால் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என பதிலளித்துள்ளனர். அவர்களின் உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.