விநாயகர் சதுர்த்தியில் எழுந்த குழப்பங்கள்...மாற்று தேதி அறிவிப்பு....அரசாணையை ரத்து செய்த அரசு..!!
வரும் 17-ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், அதனை தற்போது ரத்து செய்துள்ளது புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி
இந்தியா முழுவதும் விநாயக சதுர்த்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது மிகவும் வழக்கமான ஒன்றாகும். விநாயகரின் பிறந்தநாள் என குறிப்பிடப்படும் இத்தினத்தில் மக்கள் மண்ணாலான விநாயகரின் உருவ சிலையை வாங்கி தங்களது வீட்டில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.
அதே போல, அநேக இடஙக்ளில் விநாயகரின் பெரிய அளவிலான உருவ சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின்னர், அச்சிலைகள் நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள். இந்திய முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை முன்னிட்டு தற்போதே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் போன்ற பணிகள் துவங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
தேதியில் மாற்றம்
இந்நிலையில், தற்போது விநாயகர் சதுர்த்தி தினம் குறித்தான சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகளவில் பயன்படும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்.18-ந் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்.19-ந் தேதியும்தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும்.
ஆனால் இவற்றிக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. இதற்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவிக்க குழப்பங்கள் எழுந்தன.
இந்நிலையில், தற்போது அந்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அதாவது வரும் 17-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என அறிவித்த அரசாணையை ரத்து செய்து தற்போது வரும், செப்டம்பர் 18-ஆம் தேதி கொண்டாடப்படும் என்றும் அன்று விடுமுறை தினம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.