நகைக்கடன் தள்ளுபடி - பயனாளர்களின் விவரங்களை கேட்கும் தமிழக அரசு
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில், கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியும் ஒன்று.
இதனிடையே இன்று தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.அதில் கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடன்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்வதை அரசு முன்னுரிமையாக கொண்டுள்ளது.
முந்தைய அரசு தேர்தலுக்கு முன்பாக பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்ததால், 12,110.74 கோடி தற்போதைய அரசு மீது நிதிச்சுமையாக அமைந்துவிட்டது. இதற்காக தற்போது, 4,803.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல இதர நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும்போதும், இதே நிலைமை ஏற்படும்.
அதனால் உரிய ஆய்வுக்கு பின்பு தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்படும். அப்போது தான், தவறுசெய்பவர்கள் தவிர்க்கப்பட்டு உண்மையான பயனாளிகள் பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வகை கடன் பெற்றுள்ளவர்களின் சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கடன் பெற்றவர்களின் கேஒய்சி ஆவணங்கள், குடும்ப அட்டை விவரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.