கொரோனாவால் உயிரழந்த பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த இரண்டாம் அலை பரவலில் பல்வேறு பத்திரிகையாளர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரழந்து வருகின்றனர்.
தமிழக அரசு பத்திரிகையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
தற்போது தமிழக அரசு கொரோனாவால் உயிரழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையையும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆட்சியில் ரூ.3000 உதவித் தொகை மற்றும் இழப்பீடு 5 லட்ச ரூபாய் வழங்கப்பட்டதை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.