தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எவ்வுளவு தெரியுமா? – தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
தமிழகம் முழுவதும் 2356 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வந்த நிலையில்,கடந்த சில தினங்களாக குறைந்து காணப்பட்டது.
ஆனால்,இன்று மீண்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம்,தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில்,படிப்படியாக குறைந்து வருகிறது.அதன்படி,கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது.
அதே சமயம்,கொரோனா இறப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும் 2356 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,அதிகபட்சமாக சென்னையில் 1868 செங்கல்பட்டில் 121 பகுதிகள்,தஞ்சாவூரில் 62 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,கள்ளக்குறிச்சி,விருதுநகர்,கரூர் உள்ளிட்டசில மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை எனவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan