மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசிய ஸ்டாலின்? திடீரென்று டெல்லி செல்லும் ஆளுநர் ரவி!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரமாக இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
திமுக மீதான விமர்சனம்
தமிழ் நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் தொடர்ந்து பனிப் போர் நிலவி வருகிறது. திராவிடக் கொள்கை மீதான விமர்சனம் முதல் புகைப் படத்தில் திருவள்ளுவர் உடை காவி அணிவித்தது வரை பல்வேறு கருத்து மோதல் நிலவி வருகிறது.
மேலும் திராவிட மாடல் என்பது காலாவதியானது என்றும் அது பிரிவினை வாதத்தைத் தூண்டும் இருப்பதாகக் கூறித் தொடர்ந்து திமுகவை ஆளுநர் ரவி விமர்சனம் செய்து வருகிறார். அதே போல் ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரமாக இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி நிறைவடைந்தது.
டெல்லி பயணம்
ஆளுநர் ரவி பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை அதற்கான அறிவிப்பு குறித்து குடியரசுத் தலைவர் தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழ்நாட்டுக்குப் புதிய ஆளுநர் நியமிக்கப்படாத நிலையில் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஆளுநராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.