சென்னையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டார் தமிழக ஆளுநர் ரவி

vaccinated booster dose rn ravi tn governor
By Swetha Subash Jan 14, 2022 07:04 AM GMT
Report

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது கடந்த சில வாரங்களாக அதிகரித்து தினசரி பாதிப்பு என்பது 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு பணியில் அடுத்த கட்டமாக கடந்த 3-ம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களும், முன்கள பணியாளர்களும், சுகாதார பணியாளர்களும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி திட்டத்தை எம்ஆர்சி நகரில் கடந்த 10-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இதற்கான பணிகள் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பூஸ்டர் தடுப்பூசி என்று சொல்லப்படும் தடுப்பூசியை முதியவர்கள் ஆர்வத்துடன் செலுத்தி கொள்கின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 8 கோடிக்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் பூஸ்டர் தடுப்பூசியை நேற்று செலுத்திக் கொண்டார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை ஆளுநர் செலுத்திக் கொண்டார்.

முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.