தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்

R. N. Ravi
By Fathima Mar 06, 2026 04:46 AM GMT
Report

தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்குவங்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் கேரள ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க ஆளுநராக இருந்த அனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார், இந்நிலையில் தமிழகத்தின் ஆளுநரான ஆர்.என்.ரவி மேற்குவங்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம் | Tn Governor Rn Ravi Transferred To West Bengal

மேற்கு வங்கத்திலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது, இதுகுறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அனந்த போஸ் ராஜினாமாவுக்கான காரணங்கள் குறித்து தற்போது தனக்கு தெரியவில்லை என்றும், தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து ஆளுநர் சில அழுத்தங்களுக்கு ஆளாகியிருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரள ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம் | Tn Governor Rn Ravi Transferred To West Bengal